Bribery

நுவரெலியா ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் 89 லட்ச நிதி மோசடி? விசாரணைகள் தீவிரம்

நுவரெலியா நிருபர்  எஸ்.தியாகு

நுவரெலியா ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் 89இலட்சம் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையை மத்திய மாகாண  கல்விப் பணிப்பாளர் அமரசிரி பியதாச உறுதிப்படுத்தியுள்ளார்.

‘ஹங்குரன் கெத்த கல்வி வலயத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகஸ்தர் ஒருவரே இந்த நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்’ என்று மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அமரசிரி பியதாச மத்திய மாகாண கல்வி செயலாளர்….  ஊடாக கடந்த 29ஆம் திகதி மத்திய மாகாண பிரதம செயலாளர்  காமினி ராஜரத்னவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஹங்குரன்கெத்த வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்குப் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் நபரால் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர்கள் அல்லாதவர்களின் பெயர்களைச் சம்பள பட்டியலில் இணைத்து அதன் மூலம் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக போலியாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சம்பளம் வழங்கப்படுவதைப் போன்று அதற்கேற்றவாறாக போலியான ஆவணங்கள் அசலாகத் தயாரித்து அதன் மூலமே இந்த நிதி மோசடியில் நடைபெற்றுள்ளது.

மேலும் தற்போது கடமையில் இருக்கின்ற மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும்போது தனது மனைவி மற்றும் பிற நபர்களின் பெயர்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகளின் ஊடாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் நுனுக்கமான முறையில் இந்த நிதி மோசடியை குறித்த நபர் மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பெயர் குறிப்பிட விரும்பாதவொரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மாகாண நிதிச் சட்டத்தின்படிஇ அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் நிதி மோசடி செய்துள்ளதாக தெரிய வருகின்ற பொழுது குறித்த நபரால் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நட்டம் அல்லது தொகையை குறித்த நபரிடம் இருந்து மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கின்ற அதேவேளை அந்த நபர் தொகையை செலுத்த இணங்கிக்கொள்கின்ற பொழுது அதனை மீள அறவிடுவதற்கு ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

அதற்கமைவாகஇ குறித்த மோசடியில் ஈடுபட்ட அரசாங்க உத்தியோகத்தரான நபரிடமிருந்து இதுவரை மதிப்பிடப்பட்ட நட்டத்தை மீளப்பெற்றுக் கொள்ளவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அமரசிரி பியதாச மத்திய மாகாண கல்வி செயலாளர் மதுபானி பியசேன ஊடாக கடந்த 29ஆம் திகதி மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்னவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்; அனுமதி கோரியுள்ளார்.

அத்துடன்இ ‘பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மொத்த தொகையை மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்படும் வரை தற்பொழுது மதிப்பிடப்பட்டுள்ள தொகையை மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய மாகாண கல்விப்பணிப்பாளர் அமரசிரி பியதாச அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்இ குறித்த அரச ஊழியர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுளளதோடு. விசாரணை முடியும் வரையில் அவருக்கான எவ்விதமான கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் மத்திய மாகாண கல்விப்பணிப்பாளர் அமரசிரி பியதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ இதுவரையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பாக எந்த விதமான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை. எனினும் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நிறைவில் அதுகுறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்படுமென்று விசாரணைக்குழுவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியெருவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் என்.டி.எஸ்.நாதன் கூறுகையில்இ ‘இந்த விடயம் தொடர்பாக தாங்கள் ஹங்குரன் கெத்த வலய கல்வி பணிப்பாளர நிலந்தி விஜேதுங்கவிடம் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துமாறும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்குமாறும் அவர்களுக்கான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அழுத்தம் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த உத்தியோகத்தர் 2016ஆம் ஆண்டு வலப்பனை பிரதேச சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஹங்குரன்கெத்த வலயக் கல்வி அலுவலகத்தில் சம்பள விடயம் தொடர்பாக வாரத்தில் இரண்டு நாட்கள் கடமையாற்ற வேண்டும் என்று அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் குறித்த மோடிசகள் தொடர்பிலான விசாரணைகள் கடந்த டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் வரை அவர் தனது கடமையை முன்னெடுத்துள்ளார்.

இக்காலப்பகுதியில் வலப்பனை பிரதேச சபையிலும் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இதனை பிரதேச சபையின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த மோசடியாது பிரதேச சபையில் கடமையாற்றுகின்றவர்களின் சம்பளத்திலும் விலை மனு கோரல் ஊடாகவும் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த மோசடியிலும் மேற்படி நபரே பிரதான சந்தேக நபராக உள்ளதாகவம் அவரிடத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்இ விசாரணைக்குழுவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுத்துள்ள நபரைத் தொடர்பு கொண்டபோது தற்பொழுது இந்த விடயம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் இது தொடர்பாக நான் எந்தக் கருத்துக்களையும் வெளியிட விரும்பவில்லை’ என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Written by
Thiyagu

சுப்பிரமணியம் தியாகு அகில இலங்கை சமாதான நீதவான். 1972.08.16 நுவரெலியா கடந்த 30 வருடங்ளாக சுதந்திர ஊடகவியலாளராக இருக்கின்றேன்.இலங்கையிலும் சர்வதேசமட்டத்திலும் இருக்கின்ற பல முன்னணி பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் எனது பணியை தொடர்கின்றேன்.குறிப்பாக மலையக மக்கள் சார்ந்த விடயங்ளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்யட்பட்டுவருகின்றேன்.அதே நேரத்தில் தற்பொழுது பல்வேறு ஊழகல்ள் தொடர்பான செய்திகளை மையப்படுத்தியதாக எனது ஆக்கங்கள் வெளிவருகின்றன.இதன் ஊடாக ஊழலை வெலிக் கொனர்வதும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்ற நோக்கத்துடனும் செய்யட்பட்டு வருகின்றேன்.அதே நேரம் 2015 முதல் 2019 வரை கல்வி இராஜாங்க அமைச்சு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றில் ஊடக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளேன்.இந்தியா மலேசியா சிங்கப்பூர் தாய்லாந்து நாடுகளில் நடைற்ற ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளேன்.இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் பல பொது அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்கின்றேன்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Bribery

X-Press Pearl කරපු විනාශය සම්බන්ධයෙන් TISL සහ CEJ නැවත ශ්‍රේෂ්ඨාධිකරණයට.

එක්ප්‍රස් පර්ල් නෞකාව මෙරට මුහුදු සීමාවේදී ගිනි ගෙන මුහුදු බත්වීමේ සිද්ධිය හා...

Bribery

200மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி எங்கே?

200மில்லியன் ரூபாவுக்கும்அதிகமான நிதி எங்கே? ‘மஹபொல நம்பிக்கை நிதியம் மௌனம்: பொருளாதார நெருக்கடியால் மஹாபொல ஊக்கத்தொகை...

Bribery

அசமந்தத்தால் வருமானத்தை இழந்தது வவுனியா நகரசபை : நிலுவைத்தொகை கோடிகளை தாண்டியது

பாலநாதன் சதீஸ் வவுனியா நகரசபையினர் சரியான முறையில் சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்து அதன் பெறுமதி...

Bribery

உள்ளூராட்சி மன்ற தேர்தலும் பெண்களது வகிபாகமும்

கேஷாயினி  இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் பெண்களது வகிபாகமானது உலகளாவிய ரீதியில் ஒப்பீட்டளவில் ஓரளவாக காணப்படுகின்ற போதிலும்,...