Convictions

சுகாதார அமைச்சில் 421 மில்லியன் மோசடி

சுகாதார அமைச்சில் கணனி தொழில்நுட்பக் கொள்வனவின் போது 421மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்னவென்று தற்போது வரையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பதிலளிப்பதற்கு மறுத்து வருகின்றனர்.

இந்த நிலைமையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துத் கொடுக்கல் வாங்கல்களுக்கும் அதனுடன் தொடர்புர்டைய அதிகாரிகள் சகலரும் பொறுப்புக் கூறுவதற்கு தலைப்பட்டவர்களே.

இதனை ஏற்றுக்கொள்ளும் கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரித்த ஹேரத் வெளிப்படைத்தன்மையுடன் அரசாங்கத்தின் நிதிக்கையாளுகை அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.

இவ்வாறான நிலையில் கடந்த 2ஆம் திகதி அன்று நடைபெற்ற கோப்குழுவின் சுகாதார அமைச்சின் கொள்வனவுகள், கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற பொழுது சுகாதார அமைச்சின் கணனிக் கொள்வனவு தொடர்பிலான கொடுக்கல் வாங்கல்கள் விவகாரம் வெளிப்பட்டது.

அதன்போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக குறித்த கணனிக் கொள்வனவு குறித்துத் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் காரணமாக பெரும் சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் அரச மருந்தாக்கல் கூட்டுட்த்தாபனத்தின் தலைவர் யு.டி.எஸ். சமரசிங்ஹ இக்கொள்வனவு தொடர்பில் குறிப்பிடுகையில், குறித்த கணனித் தொழில் நுட்பத்தை பெற்றுக் கொள்வதற்காக 644 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக மாதாந்த சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக மாதம் ஒன்றிற்கு 5 மில்லியன் ரூபா வீதம் வருடத்திற்கு 60 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.ஆனால் அத் தொழில்நுட்பம் எங்களுக்கு தேவையான விதத்தில் இல்லை என்று குறிப்பிட்டார்.

அத்துடன் அவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் உள்வாங்கியிருக்கின்ற கணனி தொழில்நுட்பத்தை கொண்டு பணிகளைச் செய்ய முடியாத ஒரு நிலைமை இருக்கின்றது. அதாவது இந்த நடைமுறையில் சில விடயங்களை மாத்திரமே உட்செலுத்தி தரவுகளை பெற்றுக் கொள்ள முடியும். எமக்கு தேவையான தரவுகளை பெற்றுக் கொள்ள முடியாது. அதில் இருக்கின்ற நடைமுறையை எங்களுக்கு முழுமையாக பாவிக்க முடியாது. குறித்த திட்டத்தினை ஈ.விஸ் எனும் தனியார் நிறுவனமே செயற்படுத்துகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தக் கூற்றுக்கள் மிகப்பெருந்தொகையான செலவீனத்தில் கணனித் தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்டு அதற்கான சேவைச் செலவுகளையும் மாதாந்தம் செய்கின்றபோதும் அதனால் எவ்விதமான நன்மைகளையும் அடைய முடியவில்லை என்பதை அப்பட்டமாக்கியுள்ளது.

மேலும் இவ்வாறு பாரியளவில் செலவீனத்தினை மேற்கொண்டதன் பின்னர் அதனை மாற்றியமைப்பதற்கு மேலும் நிதி தேவைப்பட்டதாகவும் குறிப்பிடும் அவர் அதற்கான மாற்று வழிகளை பின்பற்ற முயற்சித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது இந்தக் கூற்றுக்கள் மிகப்பெருந்தொகையான செலவீனத்தில் கணனித் தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்டு அதற்கான சேவைச் செலவுகளையும் மாதாந்தம் செய்கின்றபோதும் அதனால் எவ்விதமான நன்மைகளையும் அடைய முடியவில்லை என்பதை அப்பட்டமாக்கியுள்ளது. மேலும் இவ்வாறு பாரியளவில் செலவீனத்தினை மேற்கொண்டதன் பின்னர் அதனை மாற்றியமைப்பதற்கு மேலும் நிதி தேவைப்பட்டதாகவும் குறிப்பிடும் அவர் அதற்கான மாற்று வழிகளை பின்பற்ற முயற்சித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் ‘2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டமானது 2015 ஆண்டில் தான் நடைமுறைக்கு வந்தது. அந்நிலையில் எமது பயன்பாட்டுக்கு ஏற்ப கணனி கட்டமைப்பை மாற்றியமைப்பதாக இருந்தால் மேலும் 7000 மில்லியன் ரூபா தேவையாக உள்ளது. ஆகவே தான் மாற்றுவழியாக எங்களுடைய கண்காணிப்பு பிரிவின் மூலமாக அனைத்துத் தரவுகளையும் பெற்றுக்கொள்கின்ற வகையில் ஒரு திட்டத்தை ஏற்படுத்த முயற்சி செய்தோம்’ என்று மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வெளிப்படை தன்மை இல்லை என்பது கணக்காய்வின் மூலமும் தெரியவந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு நாட்டுமக்களின் நன்மை கருதி இந்த விடயம் தொடர்பாக சரியான தகவல்களை பெற்றுக்கொண்டால் மாத்திரமே தீர்வை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

அத்துடன் அவர் ‘தரவுகளை முறையாக பெற்றுக் கொள்ள முடியாமையின் காரணமாகவே கொள்முதல் தொடர்பான தரவுகளை உறுதி செய்ய முடியாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக கூறியதோடு அந்த விடயங்களை சரியாக பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் 644 மில்லியன் ரூபாவையும் வருடத்திற்கு 60 மில்லியன் ரூபாவையும் செலவு செய்வதில் எந்த பயனும் இல்லை’ என்றும் கூறினார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி.ஹர்ஷ டி சில்வா அதிகாரிகளின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக தகவல்களை ஒழுங்குபடுத்தாது தவறுகளை இழைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

‘500 மில்லியன் ரூபா செலவு செய்து ஒரு கணனி தொழில்நுட்ப வேலைத்திட்டத்தை நடைமுறைபடுத்தியமை தொடர்பாக கணக்காய்வாளர் நாயகமும் தகவல்களை கூறினார். அந்த திட்டம் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2015 ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த திட்டத்தை நடைமுறைபடுத்துகின்ற அல்லது செயற்படுத்துகின்ற ஒப்பந்ததாரர் நடைமுறைச் சாத்தியமான சேவையை வழங்காமை பாரிய ஒரு குற்றமாகும்’ என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஈ.விஎஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ விக்கிரமநாயக்க கடந்த 03ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது சுகாதார அமைச்சிற்கு எங்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட தொழில்நுட்பமானது 500 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தது என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இன்னுமொரு தரப்பினர் அதனுடைய பெறுமதி 644 மில்லியன் என்று கூறுகின்றனர்.எங்களுக்கு 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திட்டத்திற்காக கிடைத்த கொள்முதல் பெறுமதி 223 மில்லியன் ரூபா மாத்திரமே ஆகும். உண்மையிலேயே இந்த திட்டத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகை 83 மில்லியன் ரூபா மாத்திரமே ஆகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ‘மின்பிறப்பாக்கி பிரிவுகளை வேறுபடுத்தல், 300 மேசைகள், கதிரைகள், 300 கணனி மின்சேமிப்புக் கலங்கள் 300 பதிப்பாக்கிகள் உட்பட நாடு முழுவதும் இத்திட்டத்தினை இணைப்பதற்கான வலையமைப்பு பணி ஆகிய விடயங்கள் எமது சேவைக்குள் அடங்குகின்றன. அதற்காகவே மேற்படி தொகை எம்மால் பெறப்பட்டுள்ள அதே நேரம், தற்போது புதிய தொழில்நுட்பத்தைக் கொள்வனவு செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமையால் நாம் வழங்கிய திட்டத்தை விமர்சிக்கின்றார்கள் என்று தன்பக்க கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

குறித்த திட்டத்திற்காக 644 மில்லியன் ரூபா செலவிட்டதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன குறிப்பிடுவதோடு கணக்காய்வாளர் நாயகம் 500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக கூறுகின்றார். ஆனால் ஈ.விஸ். நிறுவனம் 223 மில்லியன் ரூபாவே தமது மொத்த பெறுமதித் தொகை என்கிறது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவரினதும் ஈ.விஸ். நிறுவனத்தினதும் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் 421மில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்துள்ளது என்ற கேள்வி எழுகின்றது. கணக்காய்வாளர் மற்றும் ஈ.விஸ் நிறுவனத்தின் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் 277 மில்லியன் ரூபா காணாமல் போயுள்ளது.

சுகாதார அமைச்சுக்கான கணனித் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்காக முதலில் 5 நிறுவனங்களின் மூலமாக விலை மனு கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தான் ஈ.விஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகவே கோப் குழுவிலும் கோபா குழுவிலும் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையோ அல்லது இது தொடர்பான மேலதிக விசாரணைகளோ இடம்பெறுவதில்லை.இது ஒரு பாரிய குறைபாடாகவே இருக்கின்றது என குறிப்பிடுகின்றார் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தில் பல குழுக்களில் அங்கம் வகித்தவருமான திலகராஜ்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், இங்கு பேசப்படுகின்ற அனைத்து மோசடிகள் தொடர்பாக அதனுடைய அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு கையளிக்கப்படும். அவர் அதனுடைய மேலதிக நடநடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அது மீண்டும் ஒரு அரசியல் ரீதியான செயற்பாடாக மாறுகின்ற காரணத்தால் அது அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பதில்லை. இதுவே பெரும் குறைபாடாக இருக்கின்றது.

இதனை மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் அந்த குழுக்களில் நீதிபதிகளை நியமித்து இது தொடர்பான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே அரச துறைகளில் நடைபெறுகின்ற ஊழலை ஒழிக்க முடியும் என தனது கருத்தை முன்வைக்கின்றார்.

இதே நேரம் ஈவிஸ் குழுமத்தின் தலைவர் 02.06.2022 அன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஒரு தொகையையும் பின்பு நடைபெற்ற 06.06.2022 செய்தியாளர் சந்திப்பில் ஒரு தொகையையும் குறிப்பிடுகின்றார். இதுவும் பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. இவருடைய கருத்துக்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இதன் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்த வேண்டியது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும். அதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பாப்பாகும்.

நுவரெலியா எஸ். தியாகு

Written by
Thiyagu

சுப்பிரமணியம் தியாகு அகில இலங்கை சமாதான நீதவான். 1972.08.16 நுவரெலியா கடந்த 30 வருடங்ளாக சுதந்திர ஊடகவியலாளராக இருக்கின்றேன்.இலங்கையிலும் சர்வதேசமட்டத்திலும் இருக்கின்ற பல முன்னணி பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் எனது பணியை தொடர்கின்றேன்.குறிப்பாக மலையக மக்கள் சார்ந்த விடயங்ளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்யட்பட்டுவருகின்றேன்.அதே நேரத்தில் தற்பொழுது பல்வேறு ஊழகல்ள் தொடர்பான செய்திகளை மையப்படுத்தியதாக எனது ஆக்கங்கள் வெளிவருகின்றன.இதன் ஊடாக ஊழலை வெலிக் கொனர்வதும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்ற நோக்கத்துடனும் செய்யட்பட்டு வருகின்றேன்.அதே நேரம் 2015 முதல் 2019 வரை கல்வி இராஜாங்க அமைச்சு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றில் ஊடக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளேன்.இந்தியா மலேசியா சிங்கப்பூர் தாய்லாந்து நாடுகளில் நடைற்ற ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளேன்.இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் பல பொது அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்கின்றேன்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Convictions

ලක්ෂ 520 ක් යටකර හැදු උත්සව ශාලාවේ ආදයම වසර 05 ට ලක්ෂ 14 යි

By Prasanna Pradeep Kumara වවුනියාව දකුණ ප්‍රාදේශිය සභාව මගින් 2018 වසරේ පමණ...

Convictions

වසර 16 ක් පානීය ජලය අහිමි දිමුතුගම

By Kosala Gunawardana  පිරිසිදු, නැවුම් පානීය ජලය, මානවයාට හා අනෙකුත් ජීවීන්ට අත්‍යාවශ්‍ය වේ. ආරක්ෂා...

Convictions

ஆரம்பிக்கப்படாத திருகோணமலை இந்திய எண்ணெய்க் குத ஒப்பந்தம்; எரிபொருள் பற்றாக்குறையில் இலங்கை

By Afra Ansar  பெற்றோலியத்துக்கு எட்டப்படும் தேவைப்பாடு, பெற்றோலியத்தை இறக்குமதி செய்வது மற்றும் பெற்றோலியத்தை களஞ்சியப்படுத்துவது...

Convictions

රුපියල් 291639,356.66ක් වතුරේ යැවූ වවුනියාවේ විශේෂ ආර්ථික මධ්‍යස්ථානය

By Prasanna Pradeep Kumara වවුනියාව දිස්ත්‍රීක්කයේ ඉකුත් 2017 වසරේ ආරම්භ කොට වැඩ...