அருள்கார்க்கி
கொரோனா பரவலைத்தொடர்ந்து இலங்கையில் பொதுசுகாதாரம் மிக அத்தியாவசியமான ஒரு சேவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் முழுமையாக பெருந்தோட்ட பகுதிகளை உள்ளடக்கிய மஸ்கெலிய பிரதேச சபையானது நுவரெலியா மாவட்டத்தின் ஒரு முக்கியமான பிராந்தியமாகும்.
இப்பிரதேச சபையில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்போர் அனைவரும் பெருந்தோட்ட பின்னணியைக் கொண்டவர்களாவர். எனவே அவர்களுக்கு குறித்த பிரதேசத்தின் அபிவிருத்தி ஒரு முக்கியமான பணியாகும். அதிலும் சுகாதார சேவைகளை விஸ்தரிப்பது மிக அவசியமானதும், காலத்தின் தேவையுமாகும்.
பெருந்தோட்ட மக்களின் சுகாதார நிலையானது இன்னும் தேசிய சுகாதார சேவைகளுடன் முழுமையாக ஒன்றிணைக்கப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது. பெருந்தோட்ட துறையின் சமூக அபிவிருத்திக்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2006 – 2015 இல் தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் (MNBEI 2006) அறிக்கையின் படி 23 பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், இரு அரச கூட்டுத்தாபனங்களுக்கும் சொந்தமான தோட்டங்களில் 50 தோட்ட வைத்தியசாலைகளும் 179 மகப்பேற்று நிலையங்களும், 266 மருத்துவ நிலையங்களும் பெருந்தோட்டத்துறையில் காணப்படுகின்றன. இவற்றில் 23 தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு தரமுயர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக அண்மைக்காலத்தில் சில முன்னேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
எனவே மஸ்கெலிய பிரதேச சபைக்கு பெருந்தோட்ட பொது சுகாதாரத்தை பேணுவதில் மிக முக்கியமான கடமையாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு பாதீடு தயாரிப்பின் போது இப்பிரதேசசபை பொது சுகாதாரத்தை பேணுவதற்கான நிதி போதுமானளவு ஒதுக்கப்படாமை வரவு செலவு திட்டத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ளது.
இப்பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டு மஸ்கெலியா (320யு), பிரவுன்லோ (320N), பிரவுன்ஸ்வீக் (320ஆ), மவுசாக்கலை (320ஐ), கவரவில (320ஊ), ஓல்டன் (320 து), மொக்கா (320ஞ), ஸ்டெர்ஸ்பி (320னு), மறே (320ர்), மஹதெலு (320மு), சீத்தகங்குல (320டீ) ஆகிய 11 கிராமசேவக பிரிவுகள் உள்ளன. இந்த 11 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் பொது சுகாதாரத்தை பேணுவதற்கு போதுமான நிதி தேவைப்படுகின்றது.
சபையின் 2022 வரவு செலவுக்குட்பட்ட ஒதுக்கீட்டின் படி சுகாதார சேவைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியால் கணிசமான தொகை சம்பளம் மற்றும் கொடுப்பனவுக்காக செலவிடப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டு சம்பளத்துக்காக 10,840,800ரூபா கணக்கிடப்பட்டு 2,086,415ரூபா செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் 2022ஆம் வருடமும் 10,915,200 ரூபா சம்பளத்துக்காக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் 2021ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்ட தொகைகளில் அதிகமான தொகை மீதமாகியிருக்கின்றது. அதாவது 2021 ஆம் ஆண்டு, நாளாந்த அமைய சேவகர் கொடுப்பனவாக 600,000 ரூபா மதிப்பிடப்பட்ட போதும் 3,412,191.54 ரூபா மாத்திரமே செலவிடப்படுகின்றது. மேலதிக தொகையை ஏனைய சுகாதார மேம்பாடுகளுக்காக உபயோகித்திருக்கலாம். எனினும் 2022ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்திலும் அக்கொடுப்பனவுகளுக்காக 600,000ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஏனைய கொடுப்பனவுகளான சிவனொளிபாத விசேட சேவைக்கான வேதனம், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, சேர்க்கப்படும் கொடுப்பனவு, மேலதிக விடுமுறை கொடுப்பனவு என்பனவும் மெய் செலவுக்கு அதிகமான தொகை 2022 பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது பெருந்தோட்டங்களில் தேவையான சுகாதார உட்கட்டமைப்புக்கான அபிவிருத்தி செய்வதற்கோ, அல்லது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஏனைய பொது சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கோ நேரடியாக செலவிடப்படவில்லை. இதனால் எவ்வித உட்கட்டமைப்போ, அபிவிருத்திNயுh பிரதேசத்தில் புதிதாக ஏற்படப்போவதில்லை.
எடுத்துக்காட்டாக ஆயர்வேத மருந்தகத்தை பேணுதல், மருந்துக் கொடுத்தல், வடிகால்களை பேணுதல் மற்றும் புதுப்பித்தல், நோய் தடுப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் நடவடிக்கைகள், நீர் உள்ளிட்ட சேவைகளின் அபிவிருத்திக்கு 2021ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் சிறியளவிலான தொகையே மெய் செலவாக பதிவாகியுள்ளது.
ஒருபுறம் ஒதுக்கப்படும் நிதியானது போதுமானதாக காணப்படாத சூழலில் மறுபுறம் ஒதுக்கப்பட்ட நிதியும் செலவிடப்படாத நிலை தொடர்கின்றது. உதாரணமாக 2021 ஆம் ஆண்டு கட்டிடங்கள் ஏனைய மூலதன சொத்துக்கள் மலசலகூடம் என்பவற்றை புதுப்பித்தலுக்காக 200,000ரூபா மதிப்பீடு செய்ய்ப்பட்டுள்ளது.
எனினும் அவ்வருடம் வெறும் ரூ.2075 மாத்திரமே அதற்காக செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் 2022 ஆம் ஆண்டும் மீண்டும் அச்சேவைகளுக்காக 200,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது முன்னர் பெற்றுக் கொண்ட அதே பெறுபேற்றையே மீண்டும் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை. அதேபோல் 2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்காக 150,000 ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு இருந்த போதிலும் அத்தொகை செலவிடப்படவில்லை. மேலும் 2022ஆம் ஆண்டு 200,000 ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் சுகாதார சேவைகளுக்காக 2021 ஆம் ஆண்டு (205-6-5) 50,000 ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு அத்தொகை செலவு செய்யப்படவில்லை. மேலும் 2022 ஆம் ஆண்டு 100,000 ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
1992ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டதன் பின்னர் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் (Pடயவெயவழைn ர்ரஅயn னுநஎநடழிஅநவெ வுசரளவ) மூலமே சுகாதார சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிதியமானது எதிர்ப்பார்த்தளவு பயனுறுதிமிக்க சுகாதார சேவையினை தோட்ட மக்களுக்கு வழங்கவில்லையென பல ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதியான வைத்தியர்களின்மை, போதியளவு மருந்து பொருட்கள் இன்மை, போதியளவான உட்கட்டமைப்பு மற்றும் வளங்கள் இல்லாமை, ஊழல் மோசடி, சரியான கண்காணிப்பு முறையின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு பெருந்தோட்ட சுகாதாரத்துறை முகங்கொடுக்கின்றது.
இவ்வகையிலான சவால்கள் காணப்படுமிடத்து மஸ்கெலிய பிரதேச சபையானது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பெருந்தோட்டப்பகுதிகளில் முறையான திட்டமிடலுடன் பொது சுகாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கலாம். அதற்கு பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் ஒன்றிணைந்த முறையில் சுகாதார சேவைகளை வழங்க முடியும்.
பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடின்றி வெளிநாட்டு நிறுவனங்கள், (நோராட், யுனிசெப்) மற்றும் இலங்கை அரசாங்கங்களின் நிதி உதவியுடனேயே சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. அண்மைக்காலமாக கொவிட் பரவல் நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பவற்றால் இந்நிதியம் பாரிய நிதித்தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுப்பதனால் தோட்டத்துறை சுகாதார மேம்பாட்டில் இது மிகக்குறைந்த பங்களிப்பினையே செலுத்தக்கூடியதாகவுள்ளது.
இதன் காரணமாக பெருந்தோட்ட சமூகத்தின் சுகாதார வசதிகள் தொடர்பாக பாரிய நெருக்கடி நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளதுடன் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படாதுள்ளது. குறிப்பாக இன்று பிரசவ விடுதிகள், தரமான மருந்தகங்கள், மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள், அம்புலன்ஸ் வண்டிகள் ஆகிய வசதிகளை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியாத நிலைகளிலேயே தோட்ட வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. இவற்றை மஸ்கெலிய பிரதேச சபையானது சபை எல்லைக்குட்பட்ட பெருந்தோட்டங்களின் முகாமைத்துவங்களுடன் கலந்துரையாடி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும்.
இதைப்போல் இன்னும் ஏராளமான சுகாதாரம் சார் தேவைகள் பெருந்தொட்ட பகுதிகளில் பூர்த்திச் செய்யப்படாமல் உள்ளன. அவற்றை இனங்காண்பதும் பிரதேச சபைகளின் தலையாய பணியாகும். 2022ஆம் ஆண்டு வரவு, செலவுத்திட்ட பிரேரணைகளின் போது சபை உறுப்பினர்கள் (தவிசாளர் உள்ளடங்கலாக) எவரும் சுகாதார சேரவகளை மேம்படுத்துவதற்கான யோசனைகளையோ, பிரேரணைகளையோ முன்வைக்கவில்லை என்பதும் இங்கு அவதானிக்கத்தக்கது.
எனினும் குறிஞ்சி மக்கள் அபிவிருத்தி சங்கம் (சீத்தகங்குல 320டீ) மாத்திரம் மலசலகூடங்கள் அமைப்பதற்கான யோசனையையும் அதற்கான செலவீனமாக 900,000ரூபாவையும் திட்டமிட்டு பாதீட்டு யோசனைக்கு முன்வைத்துள்ளது. இப்பாதீட்டுக்கு தமது பிரேரணைகளை வழங்கிய ஏனைய மக்கள் அமைப்புக்கள் எவையும் சுகாதாரம் சார் சேவைகளுக்கு எவ்வித பிரேரணைகளையும் முன்வைக்கவில்லை.
2018 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டம் பிரிவு 2 உட்பிரிவு ஐ இல் பெருந்தோட்ட பிராந்தியங்களின் விடயத்தில் பிரதேச சபைகள் தோட்ட நிர்வாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பிரதேச சபை நிதியின் மூலம் பொதுச்சேவைகளை வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை கருத்திற் கொண்டு மஸ்கெலிய பிரதேச சபையானது பெருந்தோட்டங்களில் சுகாதார மேம்பாட்டுக்கான நிதியையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
Leave a comment