By Ahsan Afthar
அஸ்பிரின், அமொக்ஸிலின் அல்லது போலிக் எசிட் போன்ற பரவலான மருந்துகளை அரசாங்க வைத்தியசாலைகளில் இருந்து நீங்கள் பெற்றிருந்தால் குறித்த மருந்துகள் தொடர்பில் அவதானமாக இருங்கள். ஏனென்றால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையின் காரணமாக 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையில் 6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளன. “இந்த மருந்துகள் பயன்பாட்டுக்குப் பொருத்தமல்லாதவை என அடையாளம் காணப்படும்போது 99 வீதமானவை நோயளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன” என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ வழங்கல் பிரிவிற்கு சொந்தமான களஞ்சியங்களில் வெப்பநிலை பேணப்படாதிருந்ததுடன் செல்சியஸ் பாகை 25 இற்கு குறைந்த வெப்ப நிலையொன்றில் வைக்கப்பட வேண்டுமென உறைகளில் மேல் குறிப்பிடப்பட்டிருந்த ரூபா 104 மில்லியன் பெறுமதியான 23 மருந்து வகைகள் செல்சியஸ் பாகை 29.6 இற்கும் 32.7 இற்கும் இடையிலான வெப்பநிலையில் 730 நாட்களுக்கும் அதாவது 02 வருட காலத்தை விட மேற்பட்ட காலமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை 2017 மார்ச் 03 ஆம் திகதி மேற்கொண்ட பௌதீக பரிசோதனையின் போது வெளிப்படுத்தப்பட்டது.
வருடம் | செலவுகள் |
ரூபாய் மில்லியன் | |
2003-2010 | – |
2011 | 971 |
2012 | 1,204.00 |
2013 | – |
2014 | 363.5 |
2015 | 233.9 |
2016 | 602.4 |
………….. | |
3,374.80 |
2011 தொடக்கம் 2016 வரை தரம் குறைவாக இருந்த மருந்துகளின் பெறுமதி
அவ்வாறு களஞ்சியப்படுத்தப்பட்ட மருந்துகளுக்கிடையே கண் போன்ற மென்மையான பாகங்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற மருந்துகளும் சிறுநீரக நோய், மகப்பேற்று சத்திரசிகிச்சை என்பவைகளுக்கு தேவையான மருந்துகளும் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.
எடுத்துக்காட்டாக தடுமல், தலைவலி, பல் வலிஇ தோல் அரிப்பு மற்றும் காய்ச்சலினை குறைப்பதற்கு பரவலாக வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் அஸ்பிரின் 25 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். பற்றீரியா தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு வழங்க பயன்படுத்தப்படும் கெப்டாசிடைம் மருந்தும் 25 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். என்றாலும் பௌதீக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட தினத்தில் இந்த இரண்டு மருந்துகளும் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
எட்டு நாட்களுக்கும் மேல் குறித்த வெப்பநிலையில் களஞ்சியம் செய்யப்பட்டிருந்த அஸ்பிரின் மருந்துகளின் ஒட்டுமொத்த பெறுமதி 4644537 ரூபாய் ஆகும். 53 நாட்களுக்கும் மேல் குறித்த வெப்பநிலையில் களஞ்சியப் செய்யப்பட்டிருந்த சிட்ரிஸைன் மருந்துகளின் ஒட்டுமொத்த பெறுமதி 4644537 ரூபாய் ஆகும்.
களஞ்சிய சாலை இலக்கம் | SR இலக்கம் | மருந்தின் பெயர் | மருந்தின் அளவு | மருந்தின் பெறுமதி | களஞ்சிய சாலை பொறுப்பேற்ற மருந்தா? | மருந்து வைகப்பட வேண்டிய வெப்பநிலை | 2017/03/06
அன்று வைக்கப்பட்டிருந்த வெப்பநிலை |
மருந்து கொண்டுவரப்பட்ட திகதி | களஞ்சியசாலையில் மருந்து வைக்கப்பட்டிருந்த
நாட்களின் எண்ணிக்கை |
ரூபாய் | |||||||||
02 கீழ்மாடி | 00205403 | Aspirin 150mg | 5,294,200 | 4,644,537 | இல்லை | 25oc | 31o C | 2017.02.23 | 08 |
01 கீழ்மாடி | 00101602 | Ceftazidime inj. 1g | 150,000 | – | இல்லை | 25oc | 31oC | 2017.01.13 | 53 |
கீழ்மாடி | 00100905 | Co amoxiclav inj. 1000/200mg | – | – | இல்லை | – | – | 2017.02.09 | 25 |
02 கீழ்மாடி | 00204701 | Enoxaparin inj. 40mg/0.4ml PF syringe | 120,000 | 41,939,471 | இல்லை | 30o | – | 2017.02.27 | 07 |
08 | 00501102 | Cetirizine HCL 5ml,60 ml bot | 90,000 | 2,474,955 | இல்லை | 25oc | 30oC | 2017.02.15 | 19 |
08 | 00501301 | Chlorpheniramine Maleate Tab 4mg | 60,000,000 | 6,276,528 | இல்லை | 30oC | – | 2017.01.23 | 42 |
08 | 00800701 | Ranitidine HCL ing.50mg/2ml AMP | 400,000 | 2,043,300 | இல்லை | 30o C | – | 2017.01.25 | 40 |
07 | 00701201 | Carbimazole tablet 5mg | 7,029,000 | 11,441,610 | இல்லை | 25oc | – | 2017.02.09 | 25 |
02 | 00200501 | Mannitol Intravenous Infusion BP(20% | 40,000 | 3,189,360 | இல்லை | 20o
o C-30 C |
32oC | 2017.02.20 | 11 |
72,009,761 |
களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டிருந்த மருந்துகளின் வெப்பநிலை விபரங்கள்
காய்ச்சல், தோல் அழற்சி, பூச்சிக்கடி மற்றும் உணவு ஒவ்வாமை என்பவற்றிற்கு சிகிச்சை வழங்க பயன்படும் சிட்ரிஸைன் மருந்து 25 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இருந்திருக்க வேண்டும் என்றாலும் சோதனையின் போது 30 பாகை செல்சியஸில் அவை வைக்கப்பட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.
இதே போல இவற்றுள் கர்ப்பினித் தாய்மார்களின் சிசு ஆரோக்கியத்திற்காக வழங்கப்படும் போலிக் எசிட் மருந்துஇ நியுமோனியாவுக்கு வழங்கப்படும் அமொக்ஸிலின்இ சிறுநீர்ப்பை மற்றும் இனப்பெருக்க உறுப்புக்களில் ஏற்படும் நோய்களுக்கு வழங்கப்படும் ஒப்லொக்ஸாசின் போன்ற பல்வேறு மருந்துகள் களஞ்சிய நெறிமுறைகளுக்கு முரணாக களஞ்சியப்படுத்தப்பட்ட மருந்து வகைகளுல் அடங்கும்.
மருத்துவ வழங்கல் பிரிவின் களஞ்சியங்களில் நாடு முழுவதும் அமைந்துள்ள 27 பிரதேச மருத்துவ வழங்கல் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மருத்துவ வழங்கல் அந்த நிலையங்களினால் மாகாண சபையின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு மீண்டும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
செல்சியஸ் 25 பாகைக்கு குறைந்த வெப்ப நிலையில் களஞ்சியப்படுத்தப்பட வேண்டிய ரூபா 11.30 மில்லியன் பெறுமதியான மருந்துகளில் 61 மருந்து வகைகள் பிரதேச மருத்துவ வழங்கலில் 04 பிரிவுகளில் செல்சியஸ் பாகை 27 இற்கும் 38 இற்கும் இடையேயான வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட வேண்டியிருந்தது.
ரூபா 4.09 மில்லியன் பெறுமதியான 09 மருந்து வகைகள் அனுராதபுரம் பிரதேச மருத்துவ பிரிவில் இட வசதிகள் இல்லாததால் களஞ்சியங்களிலின் திறந்த வெளியிலும் விறாந்தைதகளிலும் களஞ்சியம் செய்யப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. மேலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் 10 வைத்தியசாலைகளில் செல்சியஸ் பாகை 25 இற்கும் குறைவான வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டிய மருந்துகள் செல்சியஸ் பாகை 34 இற்கும் 36 இற்கும் இடையிலான வெப்பநிலையில் களஞ்சியம் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் மருத்துவ வழங்கல் பிரிவிற்குரிய திகன வறாப்பிட்டியில் அமைந்துள்ள மருத்துவ வழங்கல் உப களஞ்சியத்தில் செல்சியஸ் பாகை 25 இற்கும் குறைந்த வெப்பநிலையில் களஞ்சியப்படுத்த வேண்டிய ரூபா 65.37 மில்லியன் பெறுமதியான 03 மருந்து விடயங்ககள் செல்சியஸ் பாகை 25 இற்கு மேறப்ட்ட வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமையும் அவதானிக்கப்பட்டது.
சகல அரசின் வைத்தியசாலைகளுக்காவும் மருந்து வழங்கல்களை வழங்குகின்ற மருத்துவ வழங்குல் பிரிவிலும் பிரதேச மருத்துவ வழங்கல் நிலையத்திலும் மற்றும் வைத்தியசாலைகளிலும் மருந்துக் களஞ்சியம் குறித்த வெப்பநிலையில் காணப்படாமை மருத்துவ வழங்கல்களின் தரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தமையும் அதன் மூலம் நோயாளிகளுக்கு பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றமையும் அவதானிக்கப்பட்டது.
அரசாங்க மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட சில மருந்துகள் பரிந்துரை செய்யப்பட்ட வெப்பநிலைக்குப் புறம்பாக மருத்துவ வழங்கல் பிரிவிற்கு போக்குவரத்து மூலம் கொண்டுசெல்லப்பட்டது. மருத்துவ வழங்கல் பிரிவிலும் குளிரூட்டப்பட்ட களஞ்சியத்தில் இடவசதிகள் காணப்படாமையும் மருந்து பற்றாக்குறையைத் தவிர்த்துக் கொள்வதற்கும் அந்த இருப்பு அந்த முறையிலேயே பெறப்பட்டு சாதாரண களஞ்சியத்திற்குள்ளேயே களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமையும் அவதானிக்கப்பட்டது. இதன் போது மருந்துகளுக்கு இழப்பு ஏற்படுமாயின் அந்த இருப்பை மீளளிப்புச் செய்யும் எதிர்பார்ப்பில் உரிய இருப்பு மருத்துவ வழங்கல் பிரிவு கையேற்றவாறு குறித்த வெப்பநிலையில் மருந்துகள் களஞ்சியப்படுத்தப்படாமல் மருந்துகளின் தரத்திற்கு தாக்கம் ஏற்படக்கூடியதாக இருந்தமையும் அவதானிக்கப்பட்டது.
அனேக மருந்துக் களஞ்சியங்களில் இட வசதிகள் போதியளவில் இல்லாமையினால் கணிசமான பெறுமதியுடன் மருத்துவ வழங்கல்களின் போக்குவரத்துச் சேவைகள் வழங்குனரினால் கையேற்கப்படாமல் களஞ்சியத்தின் முன்னால் விறாந்தைகளில் வைக்கப்பட்டிருநத்மையும் இடவசதிகள் கிடைத்ததன் பின்னர் அவற்றைக் களஞ்சியங்களிற்கு கையேற்று இருப்பு பெறுவனவுக் குறிப்பு விநியோகித்தல் இடம்பெற்றிருந்தது. களஞ்சியப் பொறுப்பாளரால் கையேற்கப்பட்ட மற்றும் கையேற்கப்படாத ரூபா 72 மில்லியன் பெறுமதியான இருப்புக்கள் மருத்துவ வழங்கல் பிரிவின் களஞ்சியத்திற்கு முன்பாகவுளள் விறாந்தைகளில் வைக்கப்பட்டிருந்தமை 2017 மார்ச் 03ஆந் திகதி மேற்காண்ட பௌதீக கணக்காய்வு பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் குறிப்பிட்ட காலப்பகுதியில் மருந்துப் பொருட்கள் விநியோகிக்கிப்படுவதனால் மருந்துப் பொருட்கள் காலாவதியாகும் நிலைமை குறைவடைவதுடன் உலக சுகாதார அமைப்பின் தர நிர்ணயத்திற்கேற்ப மூன்றாம் உலக நாடுகளுக்கு மருந்துப் பொருட்கள் காலாவதியாதல் 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை இடம்பெற அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் மருத்துவ விநியோகப் பிரிவு கோருகின்ற மருந்துப் பொருட்களின் விநியோக செயன்முறைக்கு (கொள்வனவுக் காலமாகிய 11 மாதங்கள் உட்பட) எடுக்கும் காலம் 17 மாதங்கள் ஆவதனால் அக்காலப்பகுதியில் நுகர்விலே பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதனாலும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதனாலும் வைத்திய விஞ்ஞானத் துறையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் மறற்றும் மருந்துகளுக்கான தேவையில் 90 சதவீதம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் தங்கியிருப்பதனாலும் மருந்துப் பொருட்கள் காலாவதியாவது அவதாணிக்கப்பட்டது.
அரசாங்க கணக்குள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் மனித பாவனைக்கு உகந்ததல்லாத மருந்துகளில் 99 சதவீதமான மருந்துகள் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்ட போதும் இதனால் பொதுமக்களுக்கு ஏறபட்ட பாதிப்புகள் குறித்து எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.
Leave a comment